இந்தியா

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும்!

மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது,

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய மாவட்ட கலெக்டருக்கே இப்படி ஒரு நிலைமை என்பது அதிர்ச்சியான விஷயமாகும்.

சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஆனால் அமைச்சர் நிர்மல்குமார் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறுகிறார். அவ்வாறு நடக்கவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் அதனை மறுத்திருக்க வேண்டும். இதுவரை அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதனை போக்க வேண்டியது மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசின் பொறுப்பாகும். எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும் பெண்கள் மீதான விஷயத்தில் பாகுபாடின்றி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் பொறுப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *