இலங்கை

மக்களுக்கு ஒன்றுமில்லாத வெறும் வெற்று வேட்டு பட்ஜெட்

மக்களுக்கு ஒன்றுமில்லாத வெறும் வெற்று வேட்டே ஜனாதிபதி முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை தொடர்பில், கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வரவு இந்த வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி வெறுமனே கணக்கு பிள்ளையாக இருக்கக் கூடாது. வரவு செலவு திட்டம் வெறும் கணக்கு வழக்காக இருக்காமல் அடுத்த வருடத்தில் நாட்டை கொண்டு செல்லக்கூடிய கணக்கு அறிக்கையாகஇருக்க வேண்டும். ஆனால் இது அவ்வாறு எதுவும் இல்லாத வெறும் வெற்று வேட்டு வரவு செலவு திட்டமாகவே இருக்கிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *