இலங்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கொழும்பு கோட்டை நீதிவானால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு மீதான விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வியாழக்கிழமை (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

குறித்த முறைப்பாட்டில் பிரதிவாதிகளில் ஒருவராக விமல் வீரவன்ச பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் சார்பில் அவரது சட்டத்தரணிகள் வியாழக்கிழமை (12) நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு நடவடிக்கைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் வியாழக்கிழமை (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *