கவிதைகள்

நினைவே நீட்சியா?… கவிதை…  சங்கர சுப்பிரமணியன்

எண்ணமே மீண்டும் வந்துமே
தென்றலால் தாலாட்டுவாயா
வண்ணமே வாழ்வாய் மலரவே
வாழ்த்துப் பாடவும் மாட்டாயா

அந்த நினைவால் வந்த சுகமும்
இந்த நாளில் என்னை தினமும்
உந்தன் அன்பில் புதைக்கிறதே

எந்தன் மனமும் அதில் அமிழ்ந்தே
மந்த மாருதமாய் மகிழ்வதை நீ
சிந்தையில் உணர மாட்டாயோ

வெள்ளிக் கிழமை வீதி வலம்வந்து
உள்ளங் கவர்ந்த நாளும் வாராதா
கிள்ளை மொழியை காதும் கேளாதா

வான் நீந்தும் ஆதவனும் ஆழ்கடல்
தன்னில் மூழ்கி மறைவதைப் போல்
உன் நினைவால் நான் மறைவேனோ

பால்நிலா மேகமதில் மூழ்குதல் போல்
வாலைக் குமரியின் உள்ளமதில் மூழ்கி
எல்லையில்லா மகிழ்வை புசிப்பேனா?

சங்கர சுப்பிரமணியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *