இலங்கை

கஸ்ஸப்ப தேரர் குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்… Video

அனுராதபுரத்தில் இடம்பெற்று வந்த கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான குழுவினரை விரட்டியடிக்க பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

அத்துடன் கஸ்ஸப்ப தேரர் குழுவினரின் கூடாரங்களும் பொதுமக்களால் கழற்றி  எரியப்பட்டுள்ளன.  குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்புக்காக குறித்த இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு

இதன்போது அங்கு நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை பாதுகாப்புக்கருதி அகற்றும்படி காவல்துறையினர் கூறியபோது கஸ்ஸப்ப தேரர்  காவல்துறையினருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளார்.

கஸ்ஸப்ப தேரர் குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள் | People Against To Kassapa Thero Protest

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு சில தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று, கஸ்ஸப்ப தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் களத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதன்போது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்த கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் பொதுமக்களால் கீழே தள்ளிவிடப்பட்டு அங்கு நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது கஸ்ஸப்ப தேரர் உள்ளி்ட்ட குழுவினரை அவ்விடத்திலிருந்து அகற்றும் முயற்சியில் காவல்துறையினரால் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *