உலகம்

09 மாதங்களுக்கு பின் உக்ரைன், ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம்

அபுதாபியில் இடம்பெறும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளின் ஒருபகுதியாக கைதிகளை பரிமாற்றிக்கொள்ள உக்ரைன், ரஷ்யா இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கீவ்விற்கும் மொஸ்கோவிற்கும் இடையே கைதி பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.

திட்டமிடப்பட்ட இந்தப் பரிமாற்றத்தில் இரு தரப்பிலிருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட கைதிகள் பரிமாற்றிக்கொள்ளப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இது அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நடைபெறக்கூடும் என்று ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் அலெக்சாண்டர் சோரின் தெரிவித்தார்.

சுமார் 16,000 உக்ரைனியர்கள் ரஷ்யக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பரவலான சித்திரவதைகள் மற்றும் தடுப்புக்காவலில் குறைந்தது 438 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டும் நிலையில், இந்த கைதி பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமானதாகவும் சாராம்சம் மிக்கதாகவும் இருந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *