இலங்கை

ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் – சோனியா காந்தி பகிர்ந்த தகவல்

ராஜிவ்காந்தியின் மரணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே ராகுல் காந்தி தந்தையின் இறுதிச்சடங்கிற்கு திரும்பி வரவேண்டியிருக்கும் என ராகுல் காந்தி தெரிவித்ததை சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

சோனியா காந்தி சுயசரிதை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி எழுதிய தனது 544 பக்க சுயசரிதை புத்தகம் ‘Belonging: A Journey of Love’ என்ற பெயரில் நேற்று வெளியானது.

ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் | Sonia Recalls Rahul Premonition Rajiv Gandhi Death

இதில், தனது கணவர் ராஜிவ் காந்தி உடனான காதல், அவர் கொல்லப்பட்டது, அதன் பின்னரான அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

1991 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை தனது சுயசரிதையில் நினைவு கூர்ந்த சோனியா காந்தி, ராஜிவ்காந்தியின் மரணத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே ராகுல் காந்தி தந்தையின் இறப்பு குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

ராஜிவ்காந்தி மரணம்

அதில், ஏதேனும் புதிய அச்சுறுத்தல் மதிப்பீட்டின் மூலம் மாற்றம் தேவைப்பட்டாலன்றி, சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு தொடர வேண்டும்” என்று ஒரு குழு தீர்மானித்திருந்தபோதிலும், அப்போதைய வி.பி. சிங் அரசால் ராஜீவின் சிறப்புப் பாதுகாப்புப் படை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்ட ஒரு வருடத்திற்கு பின்னர், அவர் உயிருக்கு எதிரான இறுதி முயற்சி நிகழ்ந்தது.

ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் | Sonia Recalls Rahul Premonition Rajiv Gandhi Death

ஆனால், அத்தகைய மறுஆய்வு எதுவும் ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மாதமே வி.பி. சிங் அரசால் சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. பயிற்சி பெற்ற ஒரு சிறப்புப் படைக்கு பதிலாக, உள்ளூர் காவல்துறை நியமிக்கப்பட்டது.

அன்று பிரியங்கா தன் அறையில் ஒரு தோழியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். ராகுல் அமெரிக்காவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

பிரியங்கா வலுக்கட்டாயமாக தன்னை அமைதிபடுத்திகொண்டு என் அறைக்கு வந்தார். அவளது சுவாசம் வேகமாக இருந்தது, முகம் நிறம் மாறியிருந்தது, அவளது கண்கள் நான் இதற்கு முன் பார்த்திராத அளவுக்குக் கருமையாக இருந்தன.

ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரு குண்டு வெடிப்பு, மக்கள் இறப்பது, மெட்ராஸ் செல்லத் தயாராகுமாறு பிரியங்கா வலியுறுத்தினார். அவள் என்ன சொல்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை, அவள் வேகமாகப் பேசிக்கொண்டிருந்தாள், எதுவும் அர்த்தமற்றதாக இருந்தது.

ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் | Sonia Recalls Rahul Premonition Rajiv Gandhi Death

ஏன் மெட்ராஸ்? ராஜீவ் மெட்ராஸில் இருந்தானா? என்ன குண்டு? அவள் வார்த்தைகளை விட, பிரியங்காவின் குரலில் இருந்த அச்சம்தான் அவள் உண்மையில் என்ன சொல்ல வருகிறாள் என்பதை உணரவிடாமல் என்னை உறைய வைத்தது. என்னால் மூச்சுவிட முடியவில்லை. அவள் முன்னே வந்து என்னை தன் கைகளில் அணைத்துக்கொண்டாள்.

‘நான் அவருடன் சென்றிருக்க வேண்டும்,’ என்று மீண்டும் மீண்டும் கதறினேன். ‘நான் ஏன் அவருடன் செல்லவில்லை?’ அவள் ஒன்றும் சொல்லவில்லை. நம்ப முடியாமல், நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொண்டு, நானே ஜார்ஜுக்கு அழைத்தேன். ‘சொல்லுங்கள், இது உண்மையா?’ அவர் குரல் தழுதழுத்தது. ‘ஆம், அது உண்மைதான், சாஹிப் இப்போது உயிருடன் இல்லை.’

பணியாளர்கள் ஒரு கூட்டமாகக் கூடி, விம்மி அழுதுகொண்டிருக்க, அவர்களின் முகங்களில் கண்ணீர் வழிந்தோடியது. என் தலை சுற்றியது. என் கால்களை என்னால் உணரவே முடியவில்லை. நான் கீழே விழும் நிலையில் இருந்தேன். பிரியங்கா என்னைப் பார்த்து, என்னைத் தாங்கிப் பிடித்துத் தன் அறைக்கு அழைத்துச் சென்று, படுக்கையில் உட்கார வைத்தாள்.

ராஜீவின் அன்பு மகள் மனம் உடைந்திருந்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். பிரியங்கா என் முன்னால் ஒருமுறை கூட அழுததில்லை. அவள் எல்லாவற்றையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, தன் அறைக்கும் ராகுலின் அறைக்கும் இடையே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.

2 மாதங்களுக்கு முன்பே சொன்ன ராகுல்காந்தி

அமெரிக்காவிலிருந்த ராகுல் காந்திக்கு நண்பர் ஒருவர் அழைத்து, கெட்ட செய்தி’ என்று கூறியபோது, ​​அவர் உடனடியாக, ‘அப்பா இறந்துவிட்டார், இல்லையா? நான் அவரை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறேன்’ என்று பதிலளித்தார்.

அவருடைய பயணத் திட்டத்தில் ஒரு தடை மட்டும் ஏற்பட்டிருக்காவிட்டால், ஸ்ரீபெரும்புதூரில், ராகுல் காந்தியும் ராஜீவின் அருகிலேயே இருந்திருப்பார். இப்போது அவர் தன் தந்தையின் அஸ்திக்கு அருகில் அசைவற்று நிற்கிறார்.

ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் | Sonia Recalls Rahul Premonition Rajiv Gandhi Death

2 மாதங்களுக்கு முன்பே ராஜீவுடன் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது அப்பாவின் பாதுகாப்பு குறித்து எதுவும் செய்யாவிட்டால், அவருடைய இறுதிச் சடங்கிற்கு நான் விரைவில் திரும்பி வர வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும்,” என்று ராகுல் கூறியிருந்தான்.

அவரது இறுதிக்கட்ட உடல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டபோது, தன் தாயைப் போலவே ராஜீவும் தன் கண்களைத் தானம் செய்திருந்தார் என்பது நினைவுக்கு வந்ததாலும், ராஜீவைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு தீவிர ஆசை ஏற்பட்டது.

இந்த விருப்பங்களை நான் யாரிடமாவது சொல்ல வேண்டியிருந்தது. நெருக்கடியான நேரங்களில் எப்போதும் எங்களுடன் இருந்த எங்கள் குடும்ப மருத்துவர் நினைவுக்கு வந்தார். ‘டாக்டர் மாத்தூர் இங்கே இருக்கிறாரா?’ ‘நான் அவரிடம் அவசரமாகப் பேச வேண்டும், இப்போது அது முக்கியம். என்று கேட்டேன்.

அதற்கு அந்த மருத்துவர், ‘கண்களா? அட என்ன பேசுறீங்க, ஒண்ணுமே மிச்சமில்லை, ஒண்ணுமே இல்லை!’ என்ற பதிலைக் கூறினார்.

அது என் வயிற்றைக் குமட்டியது, வாந்தி எடுக்க வேண்டும் போல இருந்தது. என்னால் மூச்சுவிட முடியவில்லை. நான் இறந்துவிட விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *