இலங்கை

இரு இ.போ.ச பஸ்கள் கோர விபத்து 5 பேர் பலி ;75 பேர் படுகாயம்; ரம்பேவ வெலிஓயா சந்தியில் சம்பவம்

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸும் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸும் ரம்பேவ வெலிஓயா சந்திக்கு அருகில் நேருக்கு நேர் மோதியதில் 5பேர் பலியாணத்துடன் 75 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்

மிஹிந்தலை பொலிஸ் பிரிவில் உள்ள கண்டி-யாழ்ப்பாணம் ஏ -09வீதியின் ரம்பேவ வெலிஓயா சந்திக்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கும் 9.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலும், மற்றொரு தனியார் பஸ் இந்த பஸ்கள் மீது மீது மோதியதிலும் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் .இரு பஸ்களின் சாரதிகளும் நடத்துநரும் பெண் ஒருவரும் என 5 பேர் சம்பவத்தில் பலியாகியுள்ளனர் உயிரிழந்தவர்களது சடலங்கள் ரம்பாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 75க்கும் அதிகமானோர் மதவாச்சி மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *