உலகம்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியா தீவிரம்

உக்ரைன் போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் திங்கட்கிழமை தொலைபேசியில் உரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், போரின் தற்போதைய நிலவரம், அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

அதேவேளை, அபுதாபியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் குறித்து மோடியிடம் விளக்கியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், போர் நிறுத்த உடன்பாட்டை ரஷ்யாவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகளிலும் இந்தியா பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *