இலங்கை

இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்: நடவடிக்கை ஆரம்பம்

மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

இந்த விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.

இதில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) சார்பில் கே. பிரேமச்சந்திரன், ஈரோஸ் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) சார்பில் ராமசாமி ராஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) சார்பில் சண்முகநாதன் சஞ்சீவன் ஆகியோர் தமது கட்சிகள் சார்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளைக் குழுவில் முன்வைத்தனர்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறைமை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்தது.

இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான முனீர் முலாபர், சட்டத்தரணி சுனில் வட்டகல, அருண் ஹேமச்சந்திர ஆகியோருடன், குழுவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுணாரச்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *