உலகம்

உலகம் முழுவதும் காலரா நோய் தாக்கத்தால் 3000 பேர் உயிரிழப்பு

2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகம் முழுவதும் 3,000இற்கும் மேற்பட்டோர் காலரா நோய் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், 2030-ஆம் ஆண்டிற்குள் உலகளவில் காலரா பாதிப்புகளை 90 சதவீதம் கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் சார்ந்த பாக்டீரியா நோய்களுக்கான பிரிவுத் தலைவர் லோரென்சோ பெசோலியின், 2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்த நோயால் சுமார் 7,900 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது “1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு காலராவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டாக” அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பான குடிநீர் மற்றும் நவீன கழிவுநீர் மேலாண்மை அமைப்புகளால், அதிக வருமானம் கொண்ட நாடுகளில் பல தலைமுறைகளுக்கு முன்பே காலரா ஒழிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும், தற்போதைய மருந்துகளைக் கொண்டு “எளிதாகவும் குறைந்த செலவிலும்” குணப்படுத்தக்கூடிய இந்த நோய், உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் “சில மணிநேரங்களிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்” என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே தற்போதைய ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வு, காலரா பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *