இலங்கை

‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தொடர்பில் விசாரணை

முன்மொழியப்பட்ட ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன Preethi Padman Surasena மற்றும் நீதிபதிகள் அச்சலா வெங்காப்புலி Achala Wengappuli , சம்பத் அபேகோன் Sampath Abeykoon ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​ சட்டமூலத்தில் கொண்டுவரப்பட வேண்டிய திருத்தங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிணங்க, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த வியாழக்கிழமை (05) தங்கள் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து   இந்த மனுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *