இலங்கை

அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தில் திருத்தம் தேவை; ஐ.நா வலியுறுத்து

இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு அமைவாக திருத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்ய முன்மொழிந்துள்ளதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்ததை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது இலங்கை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் புதிய சட்டமூலத்தில் சில நேர்மறையான அம்சங்கள் காணப்பட்டாலும், தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான சிக்கல்கள் பல உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, தடுப்புக் காவல் உத்தரவுகள் விரைவான மற்றும் பயனுள்ள நீதித்துறை மேற்பார்வைக்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்றும், தடுப்புக்காவல் தொடர்பான மேன்முறையீடுகளை விசாரிக்கும் சுயாதீன மீளாய்வு குழு உண்மையிலேயே சுயாதீனமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணம் திட்டமிட்ட கொலை அல்லது கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும் என்றும், சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை இதில் சேர்க்கக்கூடாது என்றும் ஐ.நா நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதேவேளை, அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றிற்காக அரசாங்கம் முன்மொழிந்துள்ள திருத்தங்கள் போதுமானதாக இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

வில் நேற்றிரவு ஔிபரப்பான 360 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, இந்தச் சட்டமூலங்களுக்குத் திருத்தங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ள போதிலும், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் எந்த வகையிலும் போதுமானவை அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *