பலதும் பத்தும்

அமெரிக்காவின் MV-22B ஒஸ்ப்ரே வானூர்தி கட்டுநாயக்கவில் தரையிறக்கம்

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான MV-22B ரக ஒஸ்ப்ரே விமானம்  நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த வானூர்தியை, உலங்கு வானூர்தி போன்று செங்குத்தாக மேலெழும்பவும், சாதாரண விமானத்தையைப் போன்று வேகமாகப் பறக்கவும் பயன்படுத்த முடியும்.

இலங்கைக்குத் தெற்கே சுமார் 50 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பலிலிருந்து புறப்பட்டு வந்துள்ள இந்த விமானம், இன்று பிற்பகல் மீண்டும் குறித்த கப்பலுக்குத் திரும்பிச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வானூர்தி பிரதானமாக அமெரிக்க மரைன் படையினரால் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *