உலகம்

செம்மணி நீதிக்கான போராட்டம் – நீதிமன்ற இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்கு சர்வதேச நீதி கோரி எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.30 மணிக்கு செம்மணியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

போராட்டத்திற்கான அழைப்பு
இன்று(07.11.2026) முற்பகல் நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த நிலையில், போராட்டத்தில் அரசியல் உணர்வும் சமூகப் பொறுப்பும் கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு புதிய தலைமுறை மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *