இலங்கை

அரசின் திட்டத்தை முறியடிக்க கூட்டம் சேர்ந்த தேரர்களின் நோக்கம் தான் என்ன..!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை குறித்த அரசின் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த தேரர்களின் நடவடிக்கை நாட்டில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ருவன்வெலிசாய விகாரையை அழிக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த போலி அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக குறித்த தேரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதன்படி, பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் இத்திட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸாருடன் தேரர்களும் முரண்பட்டனர்.

இதன்போது இருவர் கைதும் செய்யப்பட்டனர். இவ்வாறிருக்கையில், உண்மையில் அரசாங்கம் போலி திட்டத்தை தான் முன்னெடுக்கின்றதா?

தேரர்கள் தங்களது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களை கைவசம் வைத்துள்ளார்களா? அல்லது குழப்பத்தை விளைவிக்கவே இவ்வாறு செயற்படுகின்றார்களா? என்றெல்லாம் கேள்வி எழுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *