இலங்கை

பொலிஸ் ராஜ்ஜியம் குறித்து அபாய சங்கு ஊதுகிறது சஜித் அணி

“பொலிஸ் ராஜ்ஜியமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக இதற்கான அடித்தளம் இடப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, கருத்தியல் ரீதியாக எதிரணிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்த இரு சட்டமூலங்களையும் தோற்கடிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான அரசியல் தலைமையை பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *