உலகம்

வேலணை செட்டிபுலத்தில் அழுகிய நிலையில் வயோதிப ஆண்,பெண்ணின் சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலணை செட்டிபுலம் பகுதியில் இரு முதியவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் வெள்ளிக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தனிமையில் வசித்து வந்த 74 வயதுடைய முதியவரும், அவரது சகோதரி முறையான 73 வயதுடைய மூதாட்டியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அந்த வீட்டில் மூதாட்டியின் 45 வயதுடைய புத்திசுவாதீனமற்ற மகளும் வசித்து வந்துள்ளார்.

உறவினர்களின் நெருக்கமான தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்து வந்த இந்தக் குடும்பத்தினரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் வீட்டின் வளாகத்திற்குச் சென்று பார்த்தபோது இரு முதியவர்களும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கிராம அலுவலருக்கு அறிவிக்கப்பட்டதுடன், வேறு இடங்களில் வசித்து வந்த உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த இருவரின் 45 வயது மகள், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக உயிரிழந்த நிலையில் காணப்பட்ட தனது தாய் மற்றும் மாமாவுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஹனிபா ரயீஸ், சடலங்களைப் பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனும் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
இரு முதியவர்களின் உயிரிழப்பும் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *