இலங்கை

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத சஜித்!

மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு, மாதவனை அத்துமீறல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய இனவாத முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்றவர் மட்டக்களப்பில் ஒரு அநியாயம் நடக்கும் போது பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக உள்ள சஜித்பிரமதாச இதுவரை அதைப்பற்றி பேசாமல் இருப்பது அவருக்கு வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை அவமதித்துள்ளார்.

மேய்ச்சல் தரை விவகாரம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளில் அத்து மீறி பயிர்செய்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு இதுவரை எதிர்க்கட்சி தலைவர் ஏன் கூறவில்லை இந்த விடயம் தொடர்பாக ஏன் வாய்திறக்கவில்லை.

கடந்த 2024 ,யூலை, 24 இல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்து, மயிலத்தமடு மாதவனை பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதாக பகிரங்கமாக உறுதியளித்திருந்தார்.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத சஜித்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | No Comment Mylathamadu Madavanai Issue Sajith

தற்போது ஆட்சியில் இல்லை என்றாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற சிறப்புரிமையை பாவித்து நாடாளுமன்றில் மேச்சல் தரை தொடர்பாக விவாதிக்க முடியும்.அதற்கு சிரமமாக இருந்தால் நாடாளுமன்றில் இது தொடர்பாக உரையாற்றி இருக்கலாம்.

இரண்டு வருடங்களாக எதிர்க்கட்சி தலைவராக இருந்து விகாரைகளையும்,புத்தர் சிலைகளையும் பற்றி உரையாற்றும் இவர் மேச்சல்தரை விடயத்தை கணக்கெடுக்காமல் இருப்பது அவருடைய இனவாதம் வெளிப்படுகிறது என்பதே உண்மை.

தொடர் போராட்டங்கள்
தற்போது ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து சஜித் எதிர்கட்சியாக தெரிவாகி இரண்டு வருடங்கள் கடக்கிறது.

ஆனால் இதுவரை மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பண்ணையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத சஜித்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | No Comment Mylathamadu Madavanai Issue Sajith

இரண்டு வருடங்களாக தொடர்போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், பசு மாடுகள் வெட்டி கொலை, பண்ணையாளர்கள் கடத்தல். என தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.

இது பற்றி அவரும் அவருடை கட்சி உறுப்பினர்களைம் மௌனம் காப்பது தென்னிலங்கை பிரதான அரசியல் தலைவர்கள் எவரும் கணக்கெடுக்காமல் இருப்பதும் அவர்களுடைய இனவாத முகங்கள் மீண்டும் நிருபணமாகியுள்ளது.

தமிழ் பேசும் கட்சி
உண்மையில் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி தலைவர் இந்த விடயம் தொடர்பாக தமது கருத்தை கூறவில்லை.அதனை விட்டு விலகி வேறு விடயங்களை மட்டுமே அவர் தொடர்ந்து பேசி வருகின்றார். ஆனால் ஒவ்வொரு மாதமும் தமிழ் பேசும் கட்சிகளை தமது அலுவலகத்தில் அழைத்து கூட்டம் நடத்துகிறார்.

மேய்ச்சல் தரை தொடர்பாக அவர் அந்த கலந்துரையாடல்களில் பேசினாரா பேசவில்லையா என்பதைகூட அவருடைய ஊடக குழு வெளியிடவில்லை.

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத சஜித்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | No Comment Mylathamadu Madavanai Issue Sajith

வடகிழக்கு மக்களால் தெரிவான தமிழ் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் அவருடன் உரையாடுகிறார்கள் படங்கள் காட்டப்படுகின்றன.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் அக்கறை காட்டவில்லை எனில் ஏன் ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *