இலங்கை

யாழ்ப்பாண மக்களுக்காக செய்யுங்கள்; சபையில் கையேந்தி நின்ற அர்ச்சுனா எம்.பி!

யாழ்ப்பாண மக்களுக்காக ரயில் கடவைக்கான சமிஞ்சை விளக்குகளை அமைத்து தருமாறு கோரி அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றில் இன்று கையேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிரௌண்ட் வீதி முதலாம் குறுக்கு தெருவிலுள்ள ரயில் கடவைக்கான சமிஞ்சை விளக்குகளை அமைத்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அருச்சுனா எம்பி கூறுகையில், ஒரு தமிழனாக நான் வெட்கப்படுகின்றேன். காரணம், வடக்கு மாகாண மக்கள் பாண், பெற்றோல் உள்ளிட்ட பல பொருட்களுக்கு வரி செலுத்துகின்றனர்.

கோடிக்கணக்கில் வரி செலுத்தும் மக்களுக்கான சேவையை பெற்றுக்கொள்ள கையேந்தி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனது கவலையை தெரிவித்துள்ளார்.

பிரௌண்ட் வீதி முதலாம் குறுக்கு தெருவிலுள்ள ரயில் கடவைக்கான சமிஞ்சை விளக்குகளை அமைத்து தருமாறு அமைச்சர் சந்திரசேகரிடம் கோரிக்கை விடுத்து 2 வருடங்கள் என்றும் இன்னும் சமிஞ்சை விளக்குகளை அமைத்து தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *