ஐரோப்பா முழுவதும் 15 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்

ஐரோப்பா முழுவதும் குறைந்தது 15 விமானங்கள் வெடிகுண்டு மிரட்டல்களால் வழிமாற்றப்பட்டு, அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளன.
இது, பயணத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடர் எச்சரிக்கைகள் முதல் விடுக்கப்பட்டுள்ளன.
இதனால் இத்தாலி, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், பல்கேரியா, ருமேனியா, போலந்து, பின்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம், போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் செக்கியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமீபத்திய எச்சரிக்கைகள் ரயன்ஏர், ஏர் லிங்கஸ், விஸ் ஏர், ஃபின்ஏர் மற்றும் LOT ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்களைப் பாதித்தன.
சில விமானங்களில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகளில் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விமான போக்குவரத்து வல்லுநர்கள், போலி அச்சுறுத்தல்கள் தினசரி நிகழ்கின்றன என்றும், ஆனால் இவ்வளவு எண்ணிக்கையிலான நம்பகமான அச்சுறுத்தல்கள், அவை தீங்கிழைக்கும் வஞ்சகங்களாக இருந்தாலும், ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
![]()