பலதும் பத்தும்

தினமும் ஒரு கப் தயிர்.., உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

தயிர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் உணவாகும்.

தினமும் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

தயிரில் கால்சியம், புரதம், வைட்டமின் B12, பி2 மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் புரோபயாட்டிக்ஸ் பாக்டீரியாக்கள் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

அந்தவகையில், தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கிடைக்கும் நன்மைகள்
செரிமானம் மேம்படுதல்- தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் (நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்) குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு- இதில் உள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.

எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைதல்- தயிரில் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளதால், எலும்புகளும் பற்களும் பலம் பெறுகின்றன.

தொப்பை வராமல் தடுக்க உதவும் இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
தொப்பை வராமல் தடுக்க உதவும் இயற்கை உணவுகள்.., என்னென்ன தெரியுமா?
எடை மேலாண்மை- தயிர் உட்கொள்வது தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் சீராகப் பராமரிக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்- தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கெட்ட கொழுப்பின் அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

தோல் மற்றும் முடி ஆரோக்கியம்- தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தைப் பொலிவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் பொடுகைக் குறைத்து முடி உதிர்வைத் தடுக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *