பலதும் பத்தும்

யாழ் . தீவகத்திலிருந்து முதல் தேசிய கால்பந்து வீரராகத் தெரிவான சாருஜன்

மிக நீண்டகால கால்பந்துப் பாரம்பரியத்தைக் கொண்ட யாழ் தீவகம் அல்லைப்பிட்டி மண்ணைச் சேர்ந்த 16 வயதான தேவகுமார் சாருஜன் இலங்கையின் 17 வயதுக்குட்பட்ட தேசிய கால்பந்து அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுத் தீவகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். சாருஜன் அப் பகுதியிலிருந்து தேசிய கால்பந்து அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந் நிலையில் எதிர்வரும்-08 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை லாவோஸில் நடைபெறவுள்ள ஆசிய 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்துத் தொடரில் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சாருஜன் களமிறங்கவுள்ளார்.

இளம் வயதில் தேசிய அணியில் இடம்பிடித்துள்ள இவரது சாதனை வடக்கு மாகாண இளம் கால்பந்து வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இளம் வீரரின் இந்தச் சாதனை தீவக மக்களிடையே மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *