இலங்கை

கறுப்பு ஜூலை விசாரணைக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பா?

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் எதிர்க்கட்சியினர் சபையில் கூச்சலிடுகிறார்கள். நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் எவ்வாறு சமர்ப்பிப்பது என்று கூட தெரியாத எதிர்க்கட்சியே இன்று நாட்டில் உள்ளதாக அரசதரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சபையில் ஏற்பட்ட அமளிதுமளியின்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சியின் எம்.பி.க்கள் சபை நடுவில் வந்து ஜகத் விதானகேவை நோக்கி ‘ ஜகத் திருடன், ஜகத் திருடன்’ என்று ஏன் கூச்சலிடுகிறார்கள் என்று தெரியவில்லை.எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு அடிபணிந்து சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கமாட்டோம்.

நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் எவ்வாறு சமர்ப்பிப்பது என்று கூட தெரியாத எதிர்க்கட்சியே இன்று நாட்டில் உள்ளது . பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நாங்கள் தயார்

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் எதிர்க்கட்சியினர் சபையில் கூச்சலிடுகிறார்கள்.இவர்களின் கூச்சலுக்கு அச்சமடையவோ அடிபணியவோ மாட்டோம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *