இலங்கை

இலங்கை நீதிமன்றங்களில் வெளிநாடுகளிலிருந்தும் சாட்சியமளிக்க முடியும்

சாட்சிகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்தவாறு காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றங்களில் சாட்சியமளிப்பதற்கு அனுமதிக்கும் வகையில் சிவில் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் சட்டமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அரச தரப்பின் பிரதம கொரடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, சிவில் நடைமுறைச் சட்டத்தின் அத்தியாயம் 101 திருத்தத்திற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதன் பிரகாரம், நேரடியாக ஒளி-ஒலி இணைப்பு ஊடாக சாட்சிகள் சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைக்கு அமையவோ அல்லது நீதிமன்றத்தின் சொந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலோ இவ்வாறு சாட்சியமளிக்க உத்தரவிட முடியும். எனினும், இதற்கு வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரினதும் இணக்கம் அவசியம்.

இந்தத் திருத்தத்தின் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள சாட்சிகள் காணொளி இணைப்பு ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று சாட்சியமளிக்கும் வாய்ப்பும் ஏற்படவுள்ளது.

இதன்படி, சாட்சிகள் நேரடியாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காமல், ஒளி-ஒலி தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் ஊடாக சாட்சியமளிப்பதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *