பலதும் பத்தும்

சீனா – ரஷ்ய எல்லை ஆற்றில் மிதக்கும் தங்கம்

சீனா மற்றும் ரஷ்யா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான ஆற்றில் மிதந்து செல்லும் பனிக்கட்டிகள், சூரிய அஸ்தமன ஒளியில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் பேரழகிய காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குளிர்காலம் தீவிரமடைந்து ஆறு முழுமையாக உறைவதற்கு முன்பாகவே இந்த அரிய இயற்கை எழில் பதிவாகியுள்ளது.

பனிப்பொழிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் மிதக்கும் பனிக்கட்டிகள் மீது மறையும் சூரியனின் கதிர்கள் விழும்போது, அது தங்கம் போல் பிரகாசிக்கும் அற்புதக் காட்சியாக மாறுகிறது.

இந்த இயற்கை நிகழ்வை அந்தப் பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *