உலகம்

இஸ்ரேலுக்கான 4 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்த டொனால்ட் ட்ரம்ப் முடிவு

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார் 4 பில்லியன் டொலர் அளவிலான நிதியுதவியை இந்த ஆண்டின் (2026) இறுதியில் இருந்து நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியில் வலுவான நாடாக வளர்ந்துள்ளதால், அதற்கு மேற்கொண்டு இத்தகைய நிதியுதவி தேவையில்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்த நிதியுதவிகளை நிறுத்தலாம் என்ற யோசனையை நெதன்யாகுவே தன்னிடம் முன்வைத்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவின் மூலம் இஸ்ரேலுடனான நட்பு முறிந்துவிடாது என்றும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் உதவிகள் செய்யப்படும் என்றும் மற்றும் இஸ்ரேல் வழக்கம்போல் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *