இலங்கை

புதிய சட்டங்கள் மூலம் நாட்டை இராணுவ ஆட்சிக்குள் தள்ள அரசு முயல்கிறது பொலிஸாருக்கு இருந்த அதிகாரங்கள் இப்போது; இராணுவத்திற்கும் வழங்கப்படுகிறது

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான சட்டம் ஆகியவை இந்த நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு சென்று நாட்டை மோசமான நிலைக்கு தள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட சட்டமூலம் மற்றும் குற்றத்தடுப்பு சம்பந்தப்பட்ட சட்டமூலம் ஆகிய இரண்டையும் பார்த்தால், இவை இந்த இந்த நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கின்றன.

கைதுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பெருமளவான அதிகாரங்கள் உள்ளன. அதாவது, இவ்வளவு காலம் பொலிஸாருக்கு இருந்த அதிகாரங்கள் இப்போது இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வேறு நிறுவனங்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக கடல் பிரதேசங்களுக்கு வேறு முறைகளில் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கைது செய்யும் அதிகாரங்கள் வழங்கப்படலாம்.

அதுபோல வழக்கமாக 24 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு முன்னிலைப்படுத்த வேண்டிய நிலை மாறி, இப்போது 3 நாட்கள் வரை அவர்களைத் தடுத்து வைக்க முடியும். அதுமட்டுமின்றி, நீதிபதிக்குரிய அதிகாரங்கள் முழுமையாக இல்லாமல் செய்யப்படுகின்ற சட்டமூலங்களாக இருக்கின்றன. குறிப்பாக வருட காலம் வரை அமைச்சின் செயலாளரால் இந்த நபர்களை தடுத்து வைத்திருக்க முடியும்.

எனவே, ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால், உண்மையில் இந்த நாட்டை ஆட்சிக்குள் இந்த நாட்டை கொண்டு செல்லும் வகையில் அமையும்.. இரண்டாவதாக, குறிப்பாக நாம் திறந்த சிறைக் கைதிகள் போன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆர்ப்பாட்டங்களை நடத்தி, இந்த நாடு 76 ஆண்டுகால வரலாற்றைப் பற்றிப் பேசி, அனைத்திற்கும் எதிராக பேசியவர்கள்தான் இன்று ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளையும் இல்லாமல் செய்கின்றனர். இது நாட்டை மோசமான நிலைக்கே கொண்டு செல்லும். இது தொடர்பில் ஐநா மற்றும் மனித உரிமைகள் பேரவையும் கூறியுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் தனிக் கட்சி ஆட்சிக்குள் நாட்டை கொண்டுசெல்லவே முயற்சிக்கின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *