இலங்கை

நாமல் ராஜபக்ச மீது இறுகும் வழக்குகள்; மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல்

நாமல் ராஜபக்சவுக்கு மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார அறிவித்துள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (3) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

‘கிரிஷ்’ (Krrish) ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காகவே நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நாமல் ராஜபக்சவுக்கு மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார அறிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நாமல் உட்பட 41 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (02.11.2026) ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அந்த வழக்கை ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 16 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார்.

அன்றைய தினம் அனைத்து சந்தேக நபர்களையும் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 41 சந்தேக நபர்கள் உள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர். ஏனைய சந்தேக நபர்களாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உபாளி கொடிகார பிரசன்ன ரணவீர முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட 35 பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

இந்த வழக்கின் 6- 11- 13 -29- 31 ஆகிய இலக்கங்களைக் கொண்ட 5 பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையினால் அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *