இந்தியா

இந்தியாவில் எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பாரிய பேரணி – கொத்து கொத்தாக குவியும் மக்கள்

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி, பிரமாண்டமான பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியில் குவிந்துள்ளனர்.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பேரணிக்கு ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார்.

இது, அரசியல் பேரணிகள் மற்றும் போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற, மத்திய டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.

மேலும் இந்த பிரம்மாண்டமான பேரணியை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணியின்போது, ​​வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 13 கோடி (130 மில்லியன்) பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தும் கோபத்தின் ஒரு பகுதியாகவே இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *