பலதும் பத்தும்
யாழ்ப்பாணக் காற்று மிக மோசம் !

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்து, பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் AQI 142,புத்தளம் AQI 119,அனுராதபுரம் AQI 114 குறித்த மூன்று பகுதிகளும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்றது என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு AQI 90 பதிவாகி, மிதமான நிலைக்குள் உள்ளது.
AQI (Air Quality Index) வழிகாட்டுதல்களின்படி: 101 முதல் 150 வரையிலான அளவீடுகள் சமூகத்தில் பாதிப்பான குழுக்களுக்கு (இதய அல்லது நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள்) பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனினும், சாதாரண பொதுமக்களுக்கு இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()