உலகம்

இத்தாலியின் 40 நகரங்களில் நடைபெறும் மாபெரும் போராட்டம்

இத்தாலியின் பல பகுதிகளில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதிக ஊதியம், வலுவான பொதுச் சேவை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இத்தாலியின் 40 நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இந்தப் போராட்டங்களில் முக்கியமாக மாணவர்களும் தொழிலாளர்களுமே பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் பலமுறை போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *