உலகம்

உலகிற்கு டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட நம்பிக்கை தகவல்

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார், ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்றும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் இருக்காது என்பதற்கான உத்தரவாதம் எங்களுக்குத் தேவை என்றும் ட்ரம்ப் கூறினார்.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து முரண்பட்ட சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன.

அமெரிக்க ஊடகங்களின் தகவல்படி, அடுத்த வாரம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, ஈரானின் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதே வேளையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், ஈரானுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கான புதிய வரைவுத் திட்டத்தை முன்வைத்து அவர்களுடன் தொடர்புகொள்ள முயற்சிப்பதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *