உலகம்

பைனான்ஸில் ஹேக்கர்கள் கைவரிசை – 6.3 பில்லியன் டொலர்கள் திருட்டு

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸிலிருந்து ஹேக்கர்கள் 6.3 பில்லியன் டொலர்களை திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுக்கு வட கொரியாவே காரணம் என்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து கிரிப்டோகரன்சி விலைகள் சரிந்துள்ளன.

“இது ஒரு சிக்கலான தாக்குதல். இதைத் தீர்ப்பதற்காக சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்,” என்று பைனான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சில சொத்துக்களை முடக்க கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை சுமார் 3 பில்லியன் டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பரிவர்த்தனை நிறுவனம் கூறியுள்ளது.

அதேநேரம் அடுத்த 45 மணி நேரத்தில் பணம் எடுக்கும் சேவைகளை மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *