பலதும் பத்தும்

தமிழ்நாட்டில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று வல்வெட்டித்துறை மாணவி சாதனை

தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலமைச்சர் கிண்ணத்துக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருச்சி அணி சார்பில் கலந்துகொண்ட ஈழத்தமிழ் மாணவி ஜெ. தனுஜா, கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பணப்பரிசுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த 23, 24 ஆம் திகதிகளில் சென்னையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் திருச்சி மாவட்ட அணி சார்பாகக் கல்லூரி மாணவர்களுக்கான இரு வேறு நீச்சல் பிரிவுகளில் களமிறங்கிய ஈழத்தமிழ் மாணவியான தனுஜா, இரண்டு பிரிவுகளிலுமே இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தினார்.

இதன் மூலம் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இந்திய ரூபா பணப்பரிசினையும் அவர் தட்டிச் சென்றுள்ளார்.

இதேபோன்று தனுஜாவின் 10 வயது இளைய சகோதரியான டிலாஜினியும் திருச்சி அணி சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கான போட்டியில் பங்கேற்றிருந்தார்.

வயதில் மூத்தோருக்கான இந்தப் பிரிவில் போட்டியிட்ட போதிலும், 100 மீற்றர் பட்டாம்பூச்சி நீச்சல் பிரிவில் 11 ஆம் இடத்தையும், 200 மீற்றர் பட்டாம்பூச்சி நீச்சல் பிரிவில் 9 ஆம் இடத்தையும் பிடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்துவரும், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயக்குமார் – அருள்ஜோதி தம்பதியரின் புதல்விகளே தனுஜா மற்றும் டிலாஜினி ஆவர்.

இவர்கள் இருவரும் நீண்டகாலமாகப் பாடசாலை, கல்லூரி, மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய மட்டத்திலான இந்திய அளவிலான நீச்சல் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்றுப் பல சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *