உலகம்

100க்கும் மேற்பட்டோர் பலியெடுத்த ட்ரோன் தாக்குதல் ; அதிரும் மத்திய கிழக்கு

சூடான் நாட்டில் தெற்கு டர்பூர் மாகாணத் தலைநகர் நியாலாவில் உள்ள மார்க்கெட் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில், திடீரென டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.113 பேர் படுகாயம் அடைந்தனர்.

தெற்கு டார்பூரின் தலைநகரமும், ஏப்ரல் 2023 முதல் ராணுவத்துடன் போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் போர்சஸ் (RSF)-இன் கோட்டையுமான நியாலாவில் உள்ள டான்கோன்ஜ் மார்கெட் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று ‘எமர்ஜென்சி லாயர்ஸ்’ எனும் வன்முறை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு சூடான் ராணுவமே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள அக்குழு, தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

பல குடும்பங்களுக்கு, சம்பவ இடத்திலிருந்து உடல்கள் சேகரிக்கப்பட்டு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டபோதுதான், அந்தத் துயரத்தின் அளவு தெளிவாக புரிந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

வட ஆப்ரிக்காவில் அமைந்துள்ள சூடான் நாட்டில், 2021ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

ராணுவத்துடன் தங்களை இணைக்க அதிவிரைவு ஆதரவு படையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 2023ல் இருந்து இரு தரப்பினரிடையே மோதல் நீடித்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *