உலகம்

அமெரிக்க இடைக்கால தேர்தல் குறித்த கருத்து கணிப்பு!

2024 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்புக்கு வாக்களித்த தெற்காசிய அமெரிக்கர்களில் 25 சதவீதம் பேர், இம்முறை அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘இந்தியன் அமெரிக்கன் இம்பாக்ட்’ என்ற அமைப்பு 800 தெற்காசிய வாக்காளர்களிடம் இந்த ஆய்வை நடத்தியது.

இந்த கருத்துக்கணிப்பில், 87 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். ஏனைய 13 சதவீதம் பேர் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.

ட்ரம்ப்பை ஆதரித்தவர்களில் 67 சதவீதம் பேர் குடியரசு கட்சியையே ஆதரித்தாலும், கால்வாசி பேர் ஜனநாயக கட்சிக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேசம்யம் இந்திய பின்னனியை கொண்ட கமலா ஹாரிசுக்கு வாக்களித்தவர்களில் 96 சதவீதம் பேர் தொடர்ந்து ஜனநாயக கட்சிக்கே வாக்களிக்க உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *