உலகம்

இந்தியாவின் ஆந்திராவைத் தாக்கிய அர்னாப் புயல்!; ஐவர்பலி

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவை நோக்கி நகர்ந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (28) அதிகாலை வேளையில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிக்கு அருகில் பலத்த புயலாக இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்த இந்த புயல், சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புயலுடன் ஏற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது உள்ளிட்ட விபத்துகளினாலேயே இந்த உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் தற்போது அந்த புயல் வலுவிழந்து வருவதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *