உலகம்

ட்ரம்ப்புக்கு எதிராக ஒபாமா முழக்கம் !

ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தை அடையாளப்படுத்தும் “குழப்பம், கொடூரம், ஊழல் மற்றும் திறமையின்மை” ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்து, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஒஹாயோ (Ohio) மற்றும் மிச்சிகன் (Michigan) பல தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார்.

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பராக் ஒபாமா பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

தற்போது ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸின் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் மீண்டும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே இந்தத் தேர்தலின் முக்கிய நோக்கமாகும்.

எரிபொருள் விலை உயர்வால் தீவிரமடைந்துள்ள வாழ்க்கைச் செலவு உயர்வு ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய 65 வயதான முன்னாள் ஜனாதிபதி ,தற்போதைய பொருளாதார நெருக்கடியும் பொதுமக்கள் மீதான அதிகரித்து வரும் நிதிச் சுமையும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான முடிவுகளின் விளைவு என்று கூறினார்.

ஜனாதிபதி ட்ரம்ப் முற்றிலும் தேவையற்ற போரைத் தொடங்கியது உட்படத் தொடர்ச்சியான தவறான முடிவுகளை எடுத்துள்ளதாக ஒஹாயோ மாநிலத்தில் அவர் தெரிவித்தார்.

“நவீன காலத்தில் நாம் கண்டிராத அளவிலான குழப்பம், கொடூரம், ஊழல் மற்றும் திறமையின்மை நிறைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘இதுவே போதும்’ என்று சொல்வதற்கான வாய்ப்பு இப்போது உங்களுக்குக் கிடைத்துள்ளது” என கிளீவ்லேண்டில் (Cleveland) ஒபாமா கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *