பலதும் பத்தும்

சவுதி அரேபியாவுக்கான இந்திய விமான சேவை ரத்து நீடிப்பு

ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களைக் குறிவைத்து தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ரியாத் மற்றும் தம்மாம் பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமானச் சேவை ரத்துகளை நவம்பர் 7ஆம் திகதி வரை நீட்டித்துள்ளதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பயணிகளுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண்கள் ஊடாகத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன. பயணத்திற்கு முன், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விமானத்தின் தற்போதைய நிலையைச் சரிபார்க்குமாறும் ஏர் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

இண்டிகோ நிறுவனம், ரியாத்துக்கான விமானச் சேவைகளை ஒக்டோபர் 31ஆம் திகதி வரை ரத்து செய்துள்ளது. ஜெத்தா, தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான சேவைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, ரியாத்துக்கான விமானச் சேவைத் தடையை நவம்பர் 30ஆம் திகதி வரையும், ஜெத்தாவுக்கான தடையை நவம்பர் 10ஆம் திகதி வரையும் நீட்டித்துள்ளதாக அகசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *