உலகம்

வாழ்க்கை செலவு நெருக்கடிக்கு ட்ரம்ப் நிர்வாகமே காரணம் – ஒபாமா குற்றச்சாட்டு

எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகமே காரணம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

நவம்பர் 3 அன்று இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கிளீவ்லாந்தில் Cleveland வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நவீன காலத்தில் நாம் கண்டிராத குழப்பம், கொடுமை, ஊழல் மற்றும் திறமையின்மை ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ‘போதும்’ என்று சொல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய ஜனாதிபதி தொடர்ச்சியான தவறான முடிவுகளை எடுத்துள்ளதாக குறை கூறிய அவர், “மிக முக்கியமாக, யாரும் கேட்காத ஒரு தேவையற்ற போரைத் தொடங்க அவர் முடிவு செய்தார் எனவும் விமர்சித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *