உலகம்

வெனிசுலாவில் சுதந்திரமான தேர்தலை நடத்த கோரி எதிர்கட்சியினர் போராட்டம்

வெனிசுலாவில் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று முதல் முறையாக எதிர்கட்சியினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் பிற அரசியல் மாற்றங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் அமெரிக்கப் படைகள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததில் இருந்து, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மதுரோவின் முன்னாள் துணை அதிகாரியான ரோட்ரிக்ஸ் ஆகிய இருவரும் தேர்தல்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தலுக்கோ அல்லது அதிபர் தேர்தலுக்கோ இதுவரை எந்தத் தேதியும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *