உலகம்

இந்திய ராணுவத்திடம் ‘நாகஸ்திரா-2’ ஒப்படைப்பு

நாக்பூரைச் சேர்ந்த ‘சோலார் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘நாகஸ்திரா-2’ (Nagastra-2) எனும் பீரங்கி எதிர்ப்பு வெடிமருந்து அமைப்புகளை (Anti-tank loiter munitions) இந்திய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது.

இந்த ‘நாகஸ்திரா-2’ கருவியானது பகல் மற்றும் இரவு நேரப் பயன்பாட்டிற்கான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 4 கிலோ எடையுள்ள இரட்டை வெடிமருந்துத் தொகுதியுடன் (tandem shaped-charge warhead) வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கருவி, recover and reuse mode முறையில் 25 கி.மீ தூரம்
இயங்கும் திறன்கொண்டது. மேலும், இது சுமார் 60 நிமிடங்கள் வரை தொடர்ந்து வானில் பறந்து செயலாற்றும் ஆற்றல் வாய்ந்தது.

இதன் முக்கிய தொழில்நுட்ப சிறப்பம்சங்களில் ஒன்றாக, மின்னணுப் போர்முறை சூழல்களைச் சமாளிக்கும் ‘ECCM’ (Electronic Counter-Countermeasures) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

இது ஜிபிஎஸ் (GPS) மற்றும் தகவல் தொடர்புத் தடங்கல்கள் (Jamming and spoofing) போன்ற மின்னணு அச்சுறுத்தல்களையும் தாண்டிச் செயல்பட உதவுகிறது.

சோலார் டிபென்ஸ் நிறுவனத்தின் தகவல்படி, கடந்த ஆகஸ்ட் 2026-ல் ராஜஸ்தானின் மகாஜன் துப்பாக்கிச் சூடு களத்தில் (MFFR) ‘நாகஸ்திரா-2’ வெற்றிகரமாகத் தொழில்நுட்பச் சோதனைகளை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதிலும், ராணுவத்திற்கு அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களை வழங்குவதிலும் இந்த நிகழ்வு மற்றொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *