உலகம்

கென்யாவின் நைரோபியில் பல மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது; பலர் சிக்கியுள்ளதாகத் தகவல்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் பல மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கட்டடம் இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டடம் இடிந்து வீழ்ந்ததற்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *