உலகம்

டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கையை நிராகரித்த கூகுள் சுந்தர் பிச்சை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட;ரம்ப் ஒரு விளம்பர விரும்பி. அவர் அமெரிக்க பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவிக்கப்படும் போதும் அதில் தனது பெயர் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. ‘இந்தியா – பாகிஸ்தான் உட்பட பல போர்களை நிறுத்தியிருக்கிறேன் எனவே எனக்குதான் நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும்’ என்று தானாகவே கேட்டவர்தான் ட்ரம்ப்.

மேலும் இதுவரை நான் 8 போர்களை நிறுத்தியிருக்கிறேன். எனவே எனக்கு 8 நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கேட்டார். ஆனால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில்தான், கூகுள் மேப்பில் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ட்ரம்ப் பெருங்கடல் என மாற்றுமாறு ட்ரம்ப் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அதை நிராகரித்து விட்டார்.. இந்த தகவலை ட்ரம்பே தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *