உலகம்

புடினை சந்தித்தார் ட்ரம்பின் சிறப்பு தூதுவர்: போர் நிறுத்தம் குறித்து ஆராய்வு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கொப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினைச் சந்தித்து புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்துள்ளார்.

ரஷ்யாவில் புதன்கிழமை (21) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய யோசனைகள் ஆராயப்பட்டதுடன், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 74 வயதான அமெரிக்க முன்னாள் ஆசிரியர் ஸ்டீபன் ஹப்பார்டை விடுதலை செய்ய புதின் தீர்மானித்துள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

உக்ரைன் தரப்பில் கூலிப்படையாகப் போரிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவந்த அவர், குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.

உக்ரைன் போருக்கான தீர்வு தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய கருத்து வேறுபாடுகள் தொடரும் நிலையில், இந்தச் சந்திப்பு மற்றும் அமெரிக்கக் குடிமகனின் விடுதலை இராஜதந்திர முயற்சிகளில் கவனம் பெற்றுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *