உலகம்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல் – 370,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

தலைநகர் கீவ் உட்பட உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களால் பல கட்டிடங்களும், மின்சார விநியோக அமைப்புகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, சுமார் 370,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *