உலகம்

இஸ்ரேல் பொதுத் தேர்தல் நெதன்யாகுவுக்கு கடும் சவால்!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒக்டோபர் 27 அன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் கடுமையான சவால்களை எதிர்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஷின் பெட் தலைவர் இது குறித்து தெரிவிக்கையில்,”2023 ஒக்டோபர் 7 தாக்குதல்கள் நடைபெறும் என்று எச்சரிக்கப்பட்ட போதிலும், அவற்றை நெதன்யாகுவால் தடுக்க முடியவில்லை என்ற பல குற்றச்சாட்டுகளால் அவரது தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

காசா முனையில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது குறித்து நெதன்யாகுவை பலமுறை எச்சரித்ததாகக் கூறினார். மேலும் பல எச்சரிக்கைகள் பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். தேர்தலில் நெதன்யாகுவின் வெற்றி வாய்ப்புகள் என்ன என்பது குறித்த ஆய்வுகள், கருத்து கணிப்புகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *