உலகம்

மனிதாபிமானமற்ற அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஈரான் அடி பணியாது!

ஈரான் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிப் பணியாது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி, ஜார்ஜிய பிரதமர் இராக்லி கோபாகிட்ஸேவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது, ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் குறித்துப் பேசிய பெசெஷ்கியன், இந்த நடவடிக்கைகள் மனிதாபிமானக் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டவை.

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் நியாயமற்றவை
மேலும், சமீபத்திய மாதங்களில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் நியாயமற்றவை மற்றும் மனிதாபிமானமற்றவை என்று குறிப்பிட்டார்.

ஈரான் அணு ஆயுதங்களைத் தேடவில்லை. எங்கள் நாட்டிற்கு எதிராகச் செய்யப்படும் அழிவுகரமான பிரசாரங்கள் அனைத்தும் பொய்கள் என்று நாங்கள் கருதுகிறோம் என்று அவர் கூறினார்.

மேலும் அவர், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம். எங்களைச் சரணடைய வைக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஒருபோதும் அழுத்தத்திற்குப் பணிய மாட்டோம் என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *