இலங்கை

விகாரையில் சட்டவிரோதக் கட்டுமானம்;  தையிட்டிக்குச் சென்று பார்க்க பொலிஸார் தடை; வலி.வடக்குப் பிரதேச சபையினர் திரும்பினர்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தையிட்டிப் பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் மற்றும் உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை (15) அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட முயன்றுள்ளனர்.

இதன்போது விகாரையின் முன்பக்க நுழைவாயில் பூட்டப்பட்டிருந்ததுடன் அங்கு கடமையிலிருந்த பொலிஸார் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.விகாரைக்குள் கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதை நேரில் உறுதிப்படுத்துவதற்காக உள்ளே செல்வதற்கு அனுமதி கோரிய போதும் பொலிஸார் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

விகாரைக்குள் கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதை நேரில் உறுதிப்படுத்துவதற்காக உள்ளே செல்வதற்கு அனுமதி கோரிய போதும் பொலிஸார் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் விகாரையின் பின்புறப் பகுதிக்குச் சென்று பார்வையிட்ட போது அங்கு சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைக்கப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *